/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏ.எப்.டி., அருகே ரூ.72 கோடியில் புதிதாக ரயில்வே மேம்பாலம் முதல்வர் ரங்கசாமி அடிக்கல் நாட்டினார்

ADDED : டிச 13, 2024 06:07 AM
புதுச்சேரி: கடலுார் சாலையில் ஏ.எப்.டி., திடலில் 630 மீட்டர் நீளத்தில் அமைய உள்ள ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
புதுச்சேரி -கடலுார் சாலையில் ஏ.எப்.டி., திடல் ரயில்வே கிராசிங்கில் ரூ.72 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான நிதியை புதுச்சேரி அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.55 கோடி, தென்னக ரெயில்வேயின் ரூ.17 கோடி பகிர்ந்து கொண்டுள்ளன. இந்த மேம்பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை கடலுார் சாலை கோர்ட் அருகே நேற்று நடந்தது. அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை வகித்தார். முதல்வர் ரங்கசாமி பூமி பூஜை செய்து பணிகளை துவங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,க்கள் அனிபால்கென்னடி, நேரு, சம்பத், அசோக்பாபு, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், ஸ்மார்ட் சிட்டி திட்ட இணை தலைமை செயலாக்க அதிகாரி ருத்ரகவுடு, தொழில்நுட்ப அதிகாரி ரவிச்சந்திரன், தென்னக ரயில்வே பொறியாளர் ரவிக்குமார், துணை தலைமை பொறியாளர் வினோத்குமார் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
புதிய மேம்பாலம் 630 மீட்டர் நீளமும், 15 மீட்டர் அகலமும், 10 மீட்டர் உயரமும் கொண்டதாக 4 வழிப்பாதையுடன் கட்டப்பட உள்ளது. பாலத்தின் இருபுறத்திலும் சர்வீஸ் சாலையும் அமைக்கப்பட உள்ளது. சுரங்கப்பாதையும் அமைக்கப்பட உள்ளது.
ஆனால், இந்த பாலத்தில் முழு பணியையும் ரயில்வே துறையே செய்ய உள்ளது. 12 மாதத்தில் இந்த பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. புது பஸ்டாண்ட் முழுவதுமாக ஏ.எப்.டி., திடலில் இருந்து மாற்றப்பட்டதும், ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான பணிகளும் ஒருவாரத்திற்குள் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.