/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவசாயிகளுக்கு புயல் நிவாரணம் முதல்வர் இன்று துவக்கி வைக்கிறார்
/
விவசாயிகளுக்கு புயல் நிவாரணம் முதல்வர் இன்று துவக்கி வைக்கிறார்
விவசாயிகளுக்கு புயல் நிவாரணம் முதல்வர் இன்று துவக்கி வைக்கிறார்
விவசாயிகளுக்கு புயல் நிவாரணம் முதல்வர் இன்று துவக்கி வைக்கிறார்
ADDED : ஜன 16, 2025 05:58 AM
புதுச்சேரி: பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 30 கோடி ரூபாய் நிவாரணம் வழங்குவதற்கான பணியை முதல்வர் ரங்கசாமி இன்று காரைக்காலில் துவக்கி வைக்கிறார்.
பெஞ்சல் புயலால் புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்கள் மட்டுமின்றி, ஏனாம் பகுதியும் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான ஹெக்டர் பரப்பளவில் பயிர்கள் நாசமானது. அதையடுத்து, முதல்வர் ரங்கசாமி, வேளாண் அமைச்சர் தேனீஜெயக்குமார், இயக்குநர் வசந்தகுமார் உத்தரவின்படி, பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட்டு குழுவினர் ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோப்பு அனுப்பப்பட்டு, கவர்னர், நிதித் துறை ஒப்புதல் பெறப்பட்டது. காரைக்காலில் இன்று 16ம் தேதி நடக்கும் விழாவில் பாதிக்கப்பட்ட காரைக்கால் விவசாயிகளுக்கு முதற்கட்டமாக நிவாரணம் வழங்கப்பட உள்ளது. முதல்வர் ரங்கசாமி துவக்கி வைக்க உள்ளார்.
இது குறித்து வேளாண் அதிகாரிகள் கூறுகையில், 'புதுச்சேரியில் பாதிக்கப்பட்ட 7,700 விவசாயிகளுக்கு 12 கோடியே 22 லட்சமும், காரைக்கால் விவசாயிகளுக்கு 11 கோடியே 64 லட்சமும் நிவாரணம் வழங்கப்பட உள்ளது.
காரைக்காலில் 5,020 விவசாயிகளும், ஏனாமில் 199 விவசாயிகள் பயனடைய உள்ளனர். எக்டேருக்கு 30 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு கிடைக்கும். புதுச்சேரி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் பணியை முதல்வர் சட்டசபையில் துவக்கி வைப்பார். அதை தொடர்ந்து ஓரிரு நாட்களில் வங்கியில் விவசாயிகளுக்கு நிவாரணம் வரவு வைக்கப்படும்' என்றனர்.