/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இலவச மனைப்பட்டா முதல்வர் வழங்கல்
/
இலவச மனைப்பட்டா முதல்வர் வழங்கல்
ADDED : ஜூலை 29, 2025 07:29 AM

அரியாங்குப்பம் : ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், இலவச மனைப்பட்டாவை, முதல்வர் ரங்கசாமி பயனாளிகளுக்கு வழங்கினார்.
த வளக்குப்பம் தனியார் திருமண மண்டபத்தில், மணவெளி தொகுதி, டி.என்., பாளையம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த 236 பேருக்கும், பாகூர் தொகுதி மனப்பட்டு பகுதியை சேர்ந்த 8 3 பேருக்கு இலவச மனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் முத்தம்மா வரவேற்றார். சபாநாயகர் செல்வம் முன்னிலை வகித்தார். முதல்வர் ரங்கசாமி சிறப்புரை நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து, பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்கினார். நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்குமார், ரமேஷ், துறை இயக்குனர் இளங்கோ உட்பட் அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.