/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வர் பிறந்த நாள் விழா குழந்தைக்கு தங்க காசு வழங்கல்
/
முதல்வர் பிறந்த நாள் விழா குழந்தைக்கு தங்க காசு வழங்கல்
முதல்வர் பிறந்த நாள் விழா குழந்தைக்கு தங்க காசு வழங்கல்
முதல்வர் பிறந்த நாள் விழா குழந்தைக்கு தங்க காசு வழங்கல்
ADDED : ஆக 06, 2025 08:36 AM

காரைக்கால் : காரைக்காலில் முதல்வர் ரங்கசாமி பிறந்த நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு சந்திரபிரியங்கா எம்.எல்.ஏ., தங்க காசு வழங்கினார்.
காரைக்கால் மாவட்டத்தில் என்.ஆர்., காங்.,கட்சி சார்பில் முதல்வர் ரங்கசாமி 75வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று முன்தினம் நெடுங்காடு தொகுதியில் சந்திரபிரியங்கா எம்.எல்.ஏ., தலைமையில் பொதுமக்களுக்கு இலவச வேட்டி,சேலை,மரக்கன்றுகள் நலத்திட்ட உதவிகள் மற்றும் பூவம்,நெடுங்காடு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு,புத்தகம் வழங்கினார்.
முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருந்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க காசை சந்திரபிரியங்கா எம்.எல்.ஏ., வழங்கினார்.
பின் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் என்.ஆர்.,காங்.,கட்சி பிரமுகர்கள் அம்ரோஸ்,நித்தின் உள்ளிட்ட என்.ஆர்., காங்., கட்சியினர் பங்கேற்றனர்.