/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏம்பலம் தொகுதியில் முதல்வர் பிறந்தநாள் விழா
/
ஏம்பலம் தொகுதியில் முதல்வர் பிறந்தநாள் விழா
ADDED : ஆக 05, 2025 01:48 AM

பாகூர்: ஏம்பலம் தொகுதியில், முதல்வர் ரங்கசாமியின் பிறந்த நாள் விழா, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., தலைமையில் கொண்டாடப்பட்டது.
முதல்வர் ரங்கசாமி பிறந்த நாளையொட்டி ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம், சேலியமேடு, கரிக்கலாம்பாக்கம், ஏம்பலம் உள்ளிட்ட கிராமங்களில் நடந்த விழாவில், லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, அன்னதானம் மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், என்.ஆர்.காங்., தொகுதி நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள் உறுப்பினர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., தலைமையில், தொகுதி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து அவருக்கு மாலை, சால்வை அணிவித்தும், பூங்கொத்து வழங்கி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, அவரிடம் ஆசி பெற்றனர்.