/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வர் பிறந்த நாள் கால்பந்து போட்டி
/
முதல்வர் பிறந்த நாள் கால்பந்து போட்டி
ADDED : ஆக 06, 2025 11:32 PM

புதுச்சேரி:கான்பெட் நிறுவனம் சார்பில் நடந்த முதல்வர் கோப்பைக்கான கால்பந்து போட்டியில் கம்பன் மற்றும் ஜீவானாந்தம் அரசு பள்ளிகள் சாம்பியன் ஷிப் கோப்பையை வென்றன.
முதல்வர் ரங்கசாமி பிறந்த நாளையொட்டி, கான்பெட் நிறுவனம் சார்பில், 17 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டியை நடத்தியது.
கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் 11 அணிகளும், பெண்கள் பிரிவில் 4 அணிகளும் கலந்து கொண்டன.
ஆண்கள் பிரிவில் இறுதி போட்டியில் காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளி அணியும், பெத்திசெமினார் பள்ளி அணியும் மோதின. அதில், 1-0 புள்ளிகள் கணக்கில் ஜீவானந்தம் அரசு மேல்நி லைப் பள்ளி அணி முதல் பரிசை வென்றது.
பெண்கள் பிரிவில் நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி அணியும், கல்மண்டப தியாகராஜ நாயக்கர் அரசு உயர்நிலைப் பள்ளியும் மோதின. அதில், 3-0 புள்ளிகள் கணக்கில் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி முதல் பரிசை வென்றது.
முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த அணிகளுக்கு முதல்வர் ரங்கசாமி பரிசு கோப்பைகளை வழங்கினார். விழாவில் சபாநாயகர் செல்வம், அரசு கொறடா ஆறுமுகம், கான்பெட் மேலாண் இயக்குநர் அய்யப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.