/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
த.வெ.க., பொதுச் செயலாளருக்கு முதல்வர் பிறந்த நாள் வாழ்த்து
/
த.வெ.க., பொதுச் செயலாளருக்கு முதல்வர் பிறந்த நாள் வாழ்த்து
த.வெ.க., பொதுச் செயலாளருக்கு முதல்வர் பிறந்த நாள் வாழ்த்து
த.வெ.க., பொதுச் செயலாளருக்கு முதல்வர் பிறந்த நாள் வாழ்த்து
ADDED : ஜூலை 19, 2025 02:53 AM

புதுச்சேரி : பிறந்த நாள் கொண்டாடிய த.வெ.க., பொதுச்செயலாளர் ஆனந்துக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார்.
த.வெ.க., பொதுச்செயலாளர் ஆனந்து தனது பிறந்த நாளை, புதுச்சேரி, தில்லை மேஸ்திரி வீதியில் உள்ள அவரது வீட்டில் கொண்டாடினார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர். முதல்வர் ரங்கசாமி நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
அவரது வீட்டில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்ற முதல்வர் ரங்கசாமி, ஆனந்துக்கு நெற்றியில் திருநீறு பூசி, உயர்ந்த பதவிக்கு வருவாய் என, வாழ்த்தினார். அதே போல, தமிழக பல்வேறு பகுதியில் இருந்து வந்த த.வெ.க., நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்து
த.வெ.க., மாநில பொது செயலாளர் புஸ்சி ஆனந்திற்கு, கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் சார்பில், செயலாளர் விஜய் பரணிபாலாஜி தலைமையில் இணை செயலாளர் மோகன், பொருளாளர் சுந்தரமூர்த்தி உட்பட ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.