/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லாஸ்பேட்டை தொகுதியில் முதல்வர் பிறந்தநாள் விழா
/
லாஸ்பேட்டை தொகுதியில் முதல்வர் பிறந்தநாள் விழா
ADDED : ஆக 06, 2025 08:11 AM

புதுச்சேரி : லாஸ்பேட்டை தொகுதியில் முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து ஏற்பாட்டில் முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டடது.
பிறந்தநாள் விழாவையொட்டி, லாஸ்பேட்டை தொகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது. லாஸ்பேட்டை குமரன் நகரில் உள்ள என்.ஆர்.காங்., அலுவலகத்தில் முதல்வர் ரங்கசாமி பிறந்த நாள் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
லாஸ்பேட்டை தொகுதியை சேர்ந்த ஏழை மக்களுக்கு, சிவக்கொழுந்து நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினார். தொடர்ந்து ஏராளமான தொண்டர்களுடன் செண்டை மேளம் முழங்க பைக்கில் ஊர்வலமாக முதல்வர் ரங்கசாமி வீட்டிற்கு சென்று, அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
ஏற்பாடுகளை ரமேஷ்குமார் மற்றும் சிவக்கொழுந்து வின் ஆதரவாளர்கள் செய்திருந்தனர்.