/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வர் கோப்பை கபடி போட்டி: சமுதாய கல்லுாரி முதலிடம்
/
முதல்வர் கோப்பை கபடி போட்டி: சமுதாய கல்லுாரி முதலிடம்
முதல்வர் கோப்பை கபடி போட்டி: சமுதாய கல்லுாரி முதலிடம்
முதல்வர் கோப்பை கபடி போட்டி: சமுதாய கல்லுாரி முதலிடம்
ADDED : ஏப் 24, 2025 05:19 AM

புதுச்சேரி: கல்லுாரிகளுக்கு இடையே நடந்த கபடி போட்டியில் மாணவர் பிரிவில் சமுதாய கல்லுாரியும், மாணவிகள் பிரிவில் பாரதிதாசன் கல்லுாரியும் முதலிடம் பிடித்தன.
புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாய கல்லுாரி, புதுச்சேரி கபடி சங்கம் மற்றும் அரசும் இணைந்து கல்லுாரி மாணவர்களுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கபடி போட்டி, உப்பளம் ராஜிவ் காந்தி உள் விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் துவங்கியது.
இப்போட்டியல், ஆண்கள், பெண்கள் என 20 அணிகள் பங்கேற்றன.
இரண்டாம் நாளான நேற்று இறுதி போட்டிகள் நடந்தது. அதில், ஆண்கள் பிரிவில் சமுதாயக் கல்லுாரி, தாகூர் அரசு கல்லுாரி, மதகடிப்பட்டு காமராஜர் அரசு கல்லுாரி முதல் மூன்று இடங்களை பிடித்தது.
அதேபோன்று பெண்கள் பிரிவில் பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி, கோரிமேடு அன்னை தெரசா பட்ட மேற்படிப்பு மையம் மற்றும் சமுதாய கல்லுாரி அணிகள் முதல் மூன்று இடங்களை பிடித்தன.
போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வரும் 29ம் தேதி நடைபெறும் விழாவில் பரிசு வழங்கப்படுகிறது.

