/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி தனலட்சுமி சீனிவாசன் பல்கலை சாதனை
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி தனலட்சுமி சீனிவாசன் பல்கலை சாதனை
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி தனலட்சுமி சீனிவாசன் பல்கலை சாதனை
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி தனலட்சுமி சீனிவாசன் பல்கலை சாதனை
ADDED : அக் 31, 2025 02:44 AM

புதுச்சேரி:  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில்,  மாநில அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது.
போட்டியில் பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் உடற்கல்வியியல் கல்லுாரி மாணவர் சுமிதுன்ராஜ் 200 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு பெற்றார். ஜூடோ மற்றும் குத்துச்சண்டை போட்டியில் முகேஷ், பாண்டி, சஞ்சய் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம், ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு பெற்றனர்.
இதேபோல், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பலக்கலைக்கழகம் சார்பில் மாநில அளவிலான மகளிர்கான கூடைப்பந்து போட்டி, சேலம் சாரதா உடற்கல்வியியல் கல்லுாரியில் நடந்தது.
அதில், 12 அணிகள் பங்கேற்ற போட்டியில் தனலட்சுமி சீனிவாசன் உடற்கல்வியியல் கல்லுாரி அணி முதலிடம்  பிடித்து கோப்பை வென்றது.
சென்னை ஒய்.எம்.சி.ஏ  உடற்கல்வியியல் கல்லுாரியில் நடந்த மாநில அளவிலான ஆடவர் கால்பந்துப் போட்டியில் இக்கல்லுாரி அணி 2ம் இடம் பெற்றது. குத்துச்சண்டை போட்டியில் சஞ்சய், பாலாஜி, கவுதம், சிசாவரதன் ஆகியோர் முதலிடத்தையும், பைசல் ரகுமான், யோகித்ராஜ் 2ம் இடம் பிடித்தனர்.
போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் பாராட்டினார். இதில், உடற்கல்வியியல் கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், கல்வியியல் கல்லுாரி முதல்வர் பாஸ்கரன் மற்றும் உதவி பேராசிரியர்கள் உடன் இருந்தனர்.

