/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் ரூ.73 லட்சம் மோசடி: வாலிபர் கைது
/
ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் ரூ.73 லட்சம் மோசடி: வாலிபர் கைது
ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் ரூ.73 லட்சம் மோசடி: வாலிபர் கைது
ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் ரூ.73 லட்சம் மோசடி: வாலிபர் கைது
ADDED : அக் 31, 2025 02:45 AM

புதுச்சேரி:  டிஜிட்டல் அரஸ்ட் செய்துள்ளதாக மிரட்டி,  அரசு ஊழியரிடம் ரூ.73 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தமிழக வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியை சேர்ந்த பணி ஓய்வு பெற்ற அரசு ஊழியரை, கடந்த ஜூலை மாதம் மர்ம நபர் ஒருவர், மொபைல் போனில் தொடர்பு கொண்டார். அவர்,  தான் சி.பி.ஐ., அதிகாரி என்றும்,  தங்களது ஆதார் கார்டை பயன்படுத்தி வங்கி கணக்கு துவங்கி, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பண மோசடி நடத்திருப்பதாகவும், அதற்காக டிஜிட்டல் அரஸ்ட் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், அந்த வழக்கில் இருந்து விடுவிக்க 73 லட்சம் ரூபாய் அனுப்ப வேண்டும் என மர்ம ஆசாமி மிரட்டியுள்ளார்.
இதையடுத்து, மர்ம நபரின் வங்கிக் கணக்கிற்கு 73 லட்சம் ரூபாய் அனுப்பி ஏமாந்துவிட்டதாக சைபர் கிரைம் போலீசில் ஓய்வு பெற்ற ஊழியர் புகார் அளித்தார்.
அதன்பேரில், சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன், எஸ்.பி., ஸ்ருதி யாரகட்டி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
அதில், அரசு ஊழியர் அனுப்பிய பணத்தில் ரூ.10 லட்சம் திருவள்ளுவர் மாவட்டம், மதரபாக்கத்தை சேர்ந்த பீரகா சிட்டிபாபு மகன் பீரகா வம்சி, 32; என்பவரின் வங்கி கணக்கிற்கு சென்றுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில்,  அடையாளம் தெரியாத நபர் வாட்ஸ்- ஆப் மூலம் தொடர்பு கொண்டு வங்கி கணக்கு துவங்கி கொடுத்தால், அதற்கு கமிஷன் தருவதாக கூறியதாகவும், தன்னுடைய பெயரிலும், தனது மனைவியின் பெயரிலும் இரண்டு வங்கி கணக்குகளை துவங்கி கொடுத்து, அதற்காக தலா ஒரு வங்கி கணக்கிற்கு ரூ.15 ஆயிரம் வீதம் 30 ஆயிரத்தை கமிஷனாகப் பெற்றதாக தெரிவித்தார்.
அந்த 2 வங்கி கணக்குகளை ஆய்வு செய்தபோது, அதில் ஒரு கோடிக்கு மேல் பண பரிவர்த்தனை நடந்திருப்பதும், அந்த வங்கி கணக்குகள் மீது பல்வேறு மாநிலங்களில் புகார்கள் உள்ளதும் தெரிய வந்தது.
இதையடுத்து, பீரகா வம்சியிடம் இருந்து மொபைல், சிம் கார்டு, ஏ.டி.எம். கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
பின், புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பீரகா வம்சி நேற்று காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

