தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகளிர் தின விழா :முதல்வர் வாழ்த்து

 மகளிர் தின விழா :முதல்வர் வாழ்த்து

 மகளிர் தின விழா :முதல்வர் வாழ்த்து


ADDED : மார் 08, 2026 03:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2026 03:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பெண்கள் அனைவரும் சமூகத்தில் சமத்துவமும், சம வாய்ப்பும் பெற்று அனைத்து துறைகளிலும் மேன்மேலும் முன்னேறி சாதனை படைக்க வேண்டும் என, முதல்வர் ரங்கசாமி மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்து செய்தி:

குடும்ப முன்னேற்றத்திற்கும், சமூக வளர்ச்சிக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் பெண்கள் ஆற்றும் பங்கு அளவிட முடியாது. கல்வி, சுகாதாரம், தொழில், நிர்வாகம் உள்ளிட்ட பல துறைகளில் பெண்கள் தங்கள் திறமையால் சிறந்து விளங்கி சமுதாயத்திற்க பெருமை சேர்த்து வருகின்றனர்.

பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவும், அவர்களின் பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக வலுப்பெற புதுச்சேரி அரசு, குழந்தை பருவம் முதல் முதுமை காலம் வரை பெண்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்த மகளிர் தினத்தில், பெண்கள் அனைவரும் பூரண நலமுடனும், நிறைந்த மகிழ்ச்சியுடனும், சமூகத்தில், சமத்துவம், சமவாய்ப்பும் பெற்று அனைத்து துறைகளிலும் மேன்மேலும் முன்னேறி சாதனை படைக்க வேண்டும் என, வாழ்த்துகிறேன்.

இதேபோன்று சபாநாயகர் செல்வம், அமைச்சகர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீஜெயக்குமார், திருமுருகன், ஜான்குமார் உள்ளிட்டோர் மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us