/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி ரயில் நிலையத்தில் தலைமை பாதுகாப்பு அதிகாரி ஆய்வு
/
புதுச்சேரி ரயில் நிலையத்தில் தலைமை பாதுகாப்பு அதிகாரி ஆய்வு
புதுச்சேரி ரயில் நிலையத்தில் தலைமை பாதுகாப்பு அதிகாரி ஆய்வு
புதுச்சேரி ரயில் நிலையத்தில் தலைமை பாதுகாப்பு அதிகாரி ஆய்வு
ADDED : டிச 19, 2025 05:40 AM

புதுச்சேரி: தென்னிந்திய ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு அதிகாரி வெங்கட ரமண ரெட்டி, புதுச்சேரி ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தார்.
பாதுகாப்பு குறித்து இரண்டு நாள் ஆய்வு பயணமாக நேற்று செகந்திராபாத்தில் இருந்து பிரத்யேக ஆய்வு ரயிலில், தென்னிந்திய ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு அதிகாரி வெங்கடரமண ரெட்டி, கோட்ட மேலாளர் பாலகிராம் நெகி உள்பட 6 பேர் கொண்ட குழுவினர் புதுச்சேரி ரயில் நிலையத்திற்கு வந்தனர். தொடர்ந்து, ரயில் நிலையத்தில் உள்ள சிக்னல் அறை, நடைபாதை, தண்டவாளம், கோ பைலட் ஓய்வறையை ஆய்வு செய்தனர்.
பின், நிலைய மேலாளர் சந்துருவிடம் பாதுகாப்புகள் ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து, பிரத்யேக ஆய்வு ரயில் மூலம் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள வில்லியனுார், கண்டமங்கலம் ரயில் நிலையங்கள் மற்றும் மேம்பாலங்கள், ரயில்வே 'கேட்'களை பார்வையிட்டபடி விழுப்புரம் ரயில் நிலையம் சென்றடைந்தனர்.
இன்று விழுப்புரத்தில் இருந்து வேலுார் கண்டோல்மென்ட் வரை உள்ள வழித்தடங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்கிறார்.

