/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜன., 5ல் சட்டசபை முற்றுகை மா.கம்யூ., அறிவிப்பு
/
ஜன., 5ல் சட்டசபை முற்றுகை மா.கம்யூ., அறிவிப்பு
ADDED : டிச 19, 2025 05:39 AM

புதுச்சேரி: போலி மருந்து விவகாரத்தை கண்டித்து, மா.கம்யூ., சார்பில் ஜன., 5ம் தேதி சட்டசபை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் கூறியதாவது;
புதுச்சோரியில், பல ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஊழல் கூட்டணியாக உள்ளது. எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. போலி மருந்து விவகாரத்தில் என்.ஆர்.காங்., மற்றும் காங்., கட்சிகளும் ஈடுபட்டுள்ளதால், சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். போலி மருந்து விவகாரத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். போலி மருந்து ஊழலை கண்டித்து வரும் ஜனவரி 5ம் தேதி மா.கம்யூ., சார்பில் சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.
தமிழகத்தில் இண்டி கூட்டணி பலமாக உள்ளது. பா.ஜ., அ.தி.மு.க., தான் தோல்வி பயத்தில் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலில் 3ம் இடத்திற்கு செல்லும். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மனு போட்டவருக்கும், நீதிபதிக்கும் தான் பிரச்னையாக உள்ளது. பொது மக்கள் யாரும் கோரிக்கை வைக்கவில்லை.
பா.ஜ., வின் பி டீம் தான் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின். இவருக்கு இந்தியா முழுதும் தொழில் நடக்கிறது. ரங்கசாமி கூட்டணியில் நீடிக்க மாட்டார். எனவே பா.ஜ.,வின் மாற்று ஏற்பாடாக ஜோஸ் சார்லஸ் மார்ட்டினை வைத்துள்ளனர் என்றார்.

