/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
15 குளங்களை துார் வாரி மீட்டெடுக்கும் பணி துவக்கம்
/
15 குளங்களை துார் வாரி மீட்டெடுக்கும் பணி துவக்கம்
15 குளங்களை துார் வாரி மீட்டெடுக்கும் பணி துவக்கம்
15 குளங்களை துார் வாரி மீட்டெடுக்கும் பணி துவக்கம்
ADDED : டிச 19, 2025 05:38 AM

பாகூர்: பிள்ளையார்குப்பம் கிராமத்தில் துார்ந்துபோன 15 குளங்களை, துார்வாரி மீட்டெடுக்கும் பணியை, � அரபிந்தோ சொசைட்டியின் ஸ்வர்ணிம் புதுச்சேரி அமைப்பு துவங்கி உள்ளது.
பாகூர் பகுதியில் 150க்கும் மேற்பட்ட ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகள் உள்ளன.
இதில், பெரும்பாலான நீர்நிலைகள் துார்ந்துபோய் காணாமல் போய் விட்டது. எஞ்சியுள்ள ஒரு சில குளங்களே பயன்பாட்டில் இருந்து வருகிறது. இவற்றை துார்வாரி பராமரித்து, மழைநீரை சேமிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி, புதுச்சேரி ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டியின் ஸ்வர்ணிம் புதுச்சேரி சார்பில், முதற்கட்டமாக கடந்த ஆண்டு மணப்பட்டு கிராமத்தில் 20 குளங்கள் துார்வாரப்பட்டது.
இதனை தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக பிள்ளையார்குப்பம் கிராமத்தில் துார்ந்துபோய் காணாமல் போன 15 குளங்களை, 5.90 லட்ச ரூபாய் செலவில், துார்வாரி நீர் வளத்தை மேம்படுத்திட முன்வந்துள்ளது.
இதற்கான துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., புதுச்சேரி மாசுகட்டுப்பாட்டு குழும உறுப் பினர் செயலர் ரமேஷ் ஆகி யோர் பங்கேற்று, குளங்களை துார்வாரும் பணியை துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில், ஸ்வர்ணிம் புதுச்சேரி இயக்குனர் ரகுநாத், அரபிந்தோ சொசைட்டி வினோத்குமார், நீர்நிலை ஆர்வலர் எழில்வேந்தன் உட்பட பலர் உடனிருந்தனர்.

