ADDED : டிச 19, 2025 05:37 AM

புதுச்சேரி: மத்திய விஜிலன்ஸ் கமிஷன் அறிவுறுத்தலின்படி, ஜிப்மர் ஊழியர்களுக்கு ஒருநாள் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.
ஜிப்மர் இயக்குநர் வீர் சிங் நேகி, திறன் மேம்பாட்டு பிரிவு பொறுப்பு அதிகாரி ரவிக்குமார் சிட்டோரியா, இணை இயக்குநர் ரங்கபாஷியம் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
சிறப்பு அமர்வில் புதுச்சேரி அரசின் கணக்கு மற்றும் கருவூலத் துறை முன்னாள் இயக்குநர் அமிர்தலிங்கம் ஊழியர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.பொது நிர்வாகத்தில் ஊழல் தடுப்பு, நெறிமுறையான நிர்வாகம், நிதி ஒழுங்குமுறை, வெளிப்படை தன்மை, பொறுப்பு ஏற்பு குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
முறைகேடுகளை தடுக்கும் நுட்பம், நிறுவனத்தினை வலுப்படுத்தும் வழிமுறைகள் விளக்கப்பட்டது. ஏற்பாடுகளை ஜிப்மர் தலைமை விஜிலன்ஸ் அதிகாரி நந்தகி ேஷார், மூத்த நிர்வாக அதிகாரி ஹாவாசிங் ஆகியோர் செய்திருந்தனர்.

