/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வன்கொடுமை தடுப்பு கண்காணிப்பு குழு கூட்டம்
/
வன்கொடுமை தடுப்பு கண்காணிப்பு குழு கூட்டம்
ADDED : டிச 19, 2025 05:36 AM

புதுச்சேரி: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின (வன்கொடுமை தடுப்பு) சட்டம் 1989 அமலாக்கத்துறை மறு ஆய்வு செய்வது தொடர்பான உயர்மட்ட கண்காணிப்புக் குழு கூட்டம், முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமிகாந்தன், சாய் சரவணன்குமார், சந்திரபிரியங்கா, தீப்பாய்ந்தான், தலைமை செயலாளர் சரத் சவுகான், தேசிய பட்டியலின ஆணைய இயக்குனர் ரவிவர்மன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின துறை செயலாளர் முத்தம்மா மற்றும் அனைத்து அரசு செயலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், புதுச்சேரியில் மத்திய அரசால் நாடு முழுதும் சிவில் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 1955 மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம், 1989 ஆகியவற்றை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த திட்டம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி மற்றும் மறுவாழ்வு வழங்க வழிவகை செய்கிறது.
அதன்படி, புதுச்சேரியில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி வன்கொடுமை தடுப்பு பிரிவு போலீஸ் நிலையத்தில் நிரந்தர இன்ஸ்பெக்டர் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

