UPDATED : ஜூலை 30, 2026 10:25 PM
ADDED : ஜூலை 30, 2026 10:11 PM
விருத்தாசலம்: சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட முயன்ற கூலி தொழிலாளியை, போக்சோ பிரிவில் போலீசார் கைது செய்தனர்
விருத்தாசலம் அடுத்த வண்ணான்குடிகாடு இருளர் தெருவை சேர்ந்தவர் தங்கராசு மகன் சதீஷ்குமார், 37. இவர், நேற்று முன்தினம் (29ம் தேதி) மதியம் 12:00 மணியளவில், வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட முயன்றுள்ளார். சிறுமியின் சப்தம் கேட்டு, அவரது பாட்டி மற்றும் அங்கிருந்தவர்கள் பிடித்து, கருவேப்பிலங்குறிச்சி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சிறுமியின் தாய் புகாரின் பேரில், விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து, சதீஷ்குமாரை கைது செய்தனர். சதீஷ்குமாருக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
