/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சேலியமேடு அரசு பள்ளியில் சைல்டு லைன் விழிப்புணர்வு
/
சேலியமேடு அரசு பள்ளியில் சைல்டு லைன் விழிப்புணர்வு
சேலியமேடு அரசு பள்ளியில் சைல்டு லைன் விழிப்புணர்வு
சேலியமேடு அரசு பள்ளியில் சைல்டு லைன் விழிப்புணர்வு
ADDED : ஆக 08, 2025 09:49 PM
பாகூர்; சேலியமேடு வாணிதாசனார் அரசு உயர்நிலைப் பள்ளியில் சைல்டு லைன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஆசிரியர் சரவணன் வரவேற்றார். தலைமை ஆசிரியர் பழனிசாமி தலைமை தாங்கினார்.
துறையின் ஒருங்கிணைப்பாளர் நாகவல்லி, கங்காதரன், விமலா, கருத்தாளர் உளவியல் குடும்ப ஆலோசகர் கண்ணன் ஆகியோர் மாணவர்களுக்கு வளர் இளம் பருவத்தில் ஏற்படும் பிரச்னைகள். சமுதாயத்தில் நடக்கும் சிறார் திருமணத்தை சைல்டு லைன் உதவியுடன் தடுத்து நிறுத்துவது.
பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் வெரோனஸ் விஜயலட்சுமி, கணேசன், செந்தில்குமார், சித்திரை செல்வி, புஷ்பலிங்கம், பெருமாள், செந்தில் குமரன், சுந்தரி, மதிவாணன், தணிகைக்குமரன், அலுவலக உதவியாளர் வரதராசு ஆகியோர் செய்திருந்தனர்.
தமிழாசிரியர் செல்வகுமார் நன்றி கூறினார்.