UPDATED : நவ 22, 2026 11:06 PM
ADDED : நவ 22, 2026 11:06 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: லாஸ்பேட்டை குறிஞ்சி நகர், ராமன் நகர் அங்கன்வாடி மையத்தில் உறவு தென்றல் சார்பில், குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குனர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். சப்தகிரி அறக்கட்டளை பொருப்பாளர் ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
உறவு தென்றல் நிறுவனர் சுமதி, செயலர் அன்னமரி, துணை தலைவி அஞ்சாலாட்சி, சரோஜினி, நியூட்ரீஷியன் லலிதா, குழந்தை திட்ட அதிகாரி ஜெயபிரியா, குறிஞ்சி நகர் சங்கத்தின் நிர்வாகிகள் லுார்துராஜ், முத்தமிழ் ராகவன், அப்துல் வகாப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை அங்கன்வாடி ஊழியர் செண்பகவல்லி செய்திருந்தார்.
