ADDED : நவ 22, 2026 07:59 PM

அ நிறம் | அளவு
பாகூர்: கொரவள்ளிமேடு கிராமத்தில் பொது மருத்துவ முகாம் நடந்தது.
புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனை சார்பில் நடந்த முகாமினை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். முகாமில், பொது மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, கண், குழந்தைகள் நலம், சிறுநீரகவியல், அறுவை சிகிச்சை, எலும்பு, தோல், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பிரிவுகளின் நிபுணர்கள் பங்கேற்று, பொது மக்களுக்கு பரிசோதனைகள் செய்து, சிகிச்சை அளித்தனர்.
முகாமில், கொரவள்ளிமேடு, மதிக்கிருஷ்ணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
