தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சென்டாக் ஆயுர்வேத சிறப்பு சுற்று–2 கலந்தாய்வு: விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்டாக் ஆயுர்வேத சிறப்பு சுற்று–2 கலந்தாய்வு: விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்டாக் ஆயுர்வேத சிறப்பு சுற்று–2 கலந்தாய்வு: விண்ணப்பங்கள் வரவேற்பு


UPDATED : நவ 22, 2026 07:45 PM

ADDED : நவ 22, 2026 07:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2026 07:45 PM ADDED : நவ 22, 2026 07:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஆயுர்வேத இடங்களுக்கான சிறப்பு சுற்று-2 கலந்தாய்வுப் பதிவு மற்றும் புதிய விண்ணப்பங்களுக்கான அறிவிப்பை சென்டாக் வெளியிட்டுள்ளது.

மாகே ராஜிவ் காந்தி ஆயுர்வேத மருத்துவக் கல்லுாரியில் அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ், 11 பி.ஏ.எம்.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன. இணையவழியில் புதிய விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும், விருப்பத்தைத் தெரிவிக்கவும் மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்தவும் நாளை 24ம் தேதி மாலை 5.00 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இளங்கலை நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் பி.ஏ.எம்.எஸ்., இடங்களுக்குப் புதிதாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பித்த பிறகு, சிறப்பு சுற்று–-2 கலந்தாய்விற்கான விருப்பத்தைத் தெரிவித்து கட்டணம் செலுத்த வேண்டும். அரசு ஒதுக்கீட்டுத் தகுதிப் பட்டியல் முழுமையாக நிரப்பப்பட்ட பிறகே, நிர்வாக ஒதுக்கீட்டு விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.

இட ஒதுக்கீடு அந்தந்த ஒதுக்கீட்டின் அடிப்படையில் நடைபெறும் என்பதால், கோர்ஸ் முன்னுரிமைகளை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

இந்த சிறப்பு சுற்று–-2 கலந்தாய்வில் இடம் ஒதுக்கப்பட்ட பிறகு அதில் சேரத் தவறினால், ஒதுக்கப்பட்ட பாடத்திற்கான முழுக் கல்விக் கட்டணமும் பறிமுதல் செய்யப்படும்.

அடுத்தடுத்த கலந்தாய்வு சுற்றுகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்; அத்துடன் அடுத்த ஆண்டு இளங்கலை நீட் தேர்வு எழுதுவதற்கும் தடையிடப்படுவார் என சென்டாக் எச்சரித்துள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் www.centacpuducherry.in என்ற இணையதளத்தையோ, தங்களது டாஷ்போர்டில் உள்ள கிரீவன்ஸ் வசதியையோ அல்லது 0413-2655570, 2655571 என்ற உதவி எண்களையோ தொடர்பு கொள்ளலாம் என சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

தகுதியற்றவர்கள் யார்..


சென்டாக் கலந்தாய்வின் 3-ம் சுற்று, ஸ்ட்ரே, சிறப்பு ஸ்ட்ரே சுற்று ஒதுக்கீட்டுப் பட்டியலில் இடம்பெற்றவர்கள், சேர்ந்தவர்கள் அல்லது சேராதவர்கள், அகில இந்திய ஒதுக்கீடு அல்லது மாநில ஒதுக்கீட்டின் 3-ம் சுற்று சேர்க்கைப் பட்டியலில் இடம்பெற்றவர்கள், 1-ம் அல்லது 2-ம் சுற்றில் சேர்ந்தவர்கள் பங்கேற்க முடியாது.
இதேபோல் எம்.சி.சி., ஆயுஷ் கலந்தாய்வின் ஸ்ட்ரே, சிறப்பு ஸ்ட்ரே சுற்றில் ஏதேனும் இடம் ஒதுக்கப்பட்டவர்கள் பங்கேற்க முடியாது.



பதிவுக் கட்டணம்


அரசு ஒதுக்கீட்டிற்கு புதுச்சேரியை சேர்ந்த எஸ்சி., எஸ்.டி., இ.பி.சி., அரசு இட ஒதுக்கீடு பிரிவு மாணவர்கள் ரூ. 25,000; மற்றவர்களுக்கு ரூ. 74,000. நிர்வாக ஒதுக்கீட்டிற்கு அனைவருக்கும் ரூ. 2,35,000 பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.
முந்தைய சுற்றுகளில் பதிவுக் கட்டணம் செலுத்தியவர்கள், சிறப்பு சுற்று-2 கலந்தாய்விற்குரிய மீதமுள்ள தொகையை மட்டும் செலுத்தினால் போதும். விண்ணப்பதாரர்கள் தங்களது டாஷ்போர்டு வழியாக நெட் பேங்கிங் மூலம் கட்டணத்தைச் செலுத்தலாம்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us