ADDED : நவ 22, 2026 07:45 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: முத்துப்பிள்ளைபாளையத்தில் வீட்டின் மீது டிப்பர் லாரி மோதிய சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூலகுளத்தில் இருந்து பெரம்பை நோக்கி டிப்பர் லாரி (டி.என்.கே.1495) இன்று (நவ.,22) மாலை சென்று கொண்டிருந்தது. கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தறிகெட்டு ஓடியது. பின் முத்துப்பிள்ளைபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன் பகுதியில் மோதி நின்றது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவல் அறிந்த வடக்கு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே லாரி மற்றும் வீட்டின் உரிமையாளர்கள் பரஸ்பர சமாதனம் ஆகினர். போக்குரவத்து நிறைந்த சாலையில் டிப்பர் லாரி தறிகெட்டு ஓடி வீட்டின் மீது மோதிய சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
