/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கற்றல் குறைபாடுடைய குழந்தைகளை புரிந்து கொள்ள வேண்டும் : கவர்னர்
/
கற்றல் குறைபாடுடைய குழந்தைகளை புரிந்து கொள்ள வேண்டும் : கவர்னர்
கற்றல் குறைபாடுடைய குழந்தைகளை புரிந்து கொள்ள வேண்டும் : கவர்னர்
கற்றல் குறைபாடுடைய குழந்தைகளை புரிந்து கொள்ள வேண்டும் : கவர்னர்
ADDED : அக் 29, 2025 06:24 AM

புதுச்சேரி: தேசிய பன்முக மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரம் அளித்தல் நிறுவனம், புதுச்சேரி ஆட்டிசம் நலச்சங்கம் மற்றும் கற்றல் குறைபாட்டாளர் சங்கம் சார்பில், கற்றல் குறைபாட்டை புரிந்து கொள்ளுதல் என்ற தலைப்பிலான தொடர் புனர்வாழ்வு கல்வி நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயா பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், கவர்னர் கைலாஷ்நாதன் பேசுகையில், குழந்தைகளின் கற்றல் சிரமத்தை சரியான நேரத்தில் மதிப்பீடு செய்தால், தேவையான உதவியை செய்ய முடியும். இது பள்ளி இடை நிற்றலை தடுக்கும்.
கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு, ஆசிரியர் கள் பன்முக கற்பித்தல், ஒலி மற்றும் தொடுதல் முறைகளைப் பயன்படுத்தலாம்.
தேசிய பன்முக மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரம் அளித்தல் நிறுவனங்கள், புனர்வாழ்வு நிபுணர்களுக்கு பயிற்சி அளிப்பது, விழிப்புணர்வு பணிகளை சிறப்பாக செய்து வருகிறது. இதில், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்கு மிக முக்கியம்.
கற்றல் குறைபாடுகள் உள்ள குழந்தைகளைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்' என்றார். தொடர்ந்து, கற்றல் குறைபாடு உடைய மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வை யிட்டு, கலந்துரையாடினார்.
நிகழ்ச்சியில், புதுச்சேரி டிஸ்லெக்ஸியா சங்க பாதுகாவலர் மகாதேவன், ஆட்டிசம் நலச்சங்க நிறுவனர் புவனா வாசுதேவன், தேசிய பன்முக மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரம் அளித்தல் நிறுவன இயக்குநர் நாச்சிக்கேத்த ரவுட், புனர்வாழ்வு கல்வி அதிகாரி அனுசுயா பங்கேற்றனர்.

