ADDED : ஏப் 12, 2025 07:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்; முருங்கப்பாக்கம் முத்துகுமார சாமி கோவில், நடந்த பங்குனி உத்திர திருவிழாவில், மிளகாய் கரைசல் அபிேஷகம் நடந்தது.
முருங்கப்பாக்கம் முத்துகுமார சாமி கோவில், பங்குனி உத்திர திருவிழாவில், நேற்று மிளகாய் கரைசலில், சுவாமிக்கு அபிேஷகம் செய்யப்பட்டது.
ரயில் நிலையம் அருகே உள்ள கவுசிக பாலசுப்ரமணியர் கோவில், லாஸ்பேட்டை சிவசுப்ரமணிய சாமி, கதிர்காமம் முருகன் கோவில், காராமணிக்குப்பம் சிவசுப்ரமணிய சாமி, அரியாங்குப்பம் அடுத்த காலாந்தோட்டம் சிவசுப்ரமணியர், சுப்பையா நகர் பாலமுருகன், செடிலாடும், செங்கழுநீர் அம்மன் கோவில், தவளக்குப்பம் சுப்ரமணியர் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள முருகன் கோவில்களில், பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, காவடி, பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.

