/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுமி பாலியல் விவகாரத்தில் பள்ளி சூறை குறித்து புகார்
/
சிறுமி பாலியல் விவகாரத்தில் பள்ளி சூறை குறித்து புகார்
சிறுமி பாலியல் விவகாரத்தில் பள்ளி சூறை குறித்து புகார்
சிறுமி பாலியல் விவகாரத்தில் பள்ளி சூறை குறித்து புகார்
ADDED : பிப் 20, 2025 06:24 AM
அரியாங்குப்பம்: சிறுமி பாலியல் விவகாரம் தொடர்பாக, பள்ளியில் புகுந்து பொருட்களை சேதப்படுத்திய நபர்கள் மீது பள்ளி முதல்வர் போலீசில் புகார் அளித்தார்.
தவளக்குப்பம் தானாம்பாளையம் செயின்ட் ஜோசப் ஆங்கிலப் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு, சிறுமிக்கு ஆசிரியர், பாலியல் தொல்லை கொடுத்தாக, சிறுயின் பெற்றோர், பொதுமக்களுடன் சென்று கடந்த 14ம் தேதி, பள்ளியை சூறையாடினர்.
புதுச்சேரி - கடலுார் சாலை தவளக்குப்பம் சந்திப்பில், 8 மணி நேரம் சாலை மறியல் நடந்தது. இந்த வழக்கு தொடர்பாக, அந்த பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் மணிகண்டனை, தவளக்குப்பம் போலீசார், போக்சோவில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
பள்ளி முதல்வர் யுவராஜ், 38, நேற்று தவளக்குப்பம் போலீசில் புகார் அளித்தார். அதில், கடந்த 14ம் தேதி, பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் பாலியல் புகார் தொடர்பாக, பள்ளியில் புகுந்து, சூறையாடினர். வெளியில் இருந்த நான் பள்ளிக்கு சென்று பார்க்கும் போது,பள்ளியில் வைத்திருந்த 1 லட்சத்து 87 ஆயிரம் பணம், வாகனங்கள், கம்ப் யூட்டர்கள், சி.சி.டி.வி., கேமராக்கள், ஜெராக்ஸ் மெஷின், டேபிள், சேர் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தப்பட்டன. அதில், 1 கோடியே 7 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளன.
நடக்காத ஒன்றை, நடந்ததாக, கூறி, பள்ளியில் புகுந்து சூறையாடி, பொருட்களை சேதப்படுத்தி, அங்கு பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்களை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமான பொருட்களுக்கு நஷ்டஈடு வழக்க வேண்டும் என, அவர் புகாரில் தெரிவித்தார்.
அதன்பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

