/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் விழா: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
/
புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் விழா: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் விழா: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் விழா: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
ADDED : டிச 25, 2024 06:13 AM

புதுச்சேரி : கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, நேற்றிரவு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
கிறிஸ்துமஸ் விழா இன்று (25ம் தேதி) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, புதுச்சேரியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நேற்று நள்ளிரவு, சிறப்பு பிரார்த்தனை நடந்தது. புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள ஜென்மராக்கினி மாதா தேவாலயத்தில் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் கிறிஸ்துமஸ் கூட்டு திருப்பலி நடந்தது. புதுச்சேரி சுப்பையா சாலை, ரயில் நிலையம் எதிரே உள்ள துாய இருதய ஆண்டவர் பசிலிக்காவில் பங்குத் தந்தை பிச்சைமுத்து தலைமையில், சிறப்பு திருப்பலி நடந்தது.
தொடர்ந்து, புதுச்சேரி - கடலுார் உயர் மறை மாநில ஆவணக்காப்பாளர் பாதிரியார் மெல்கிசேதேக் குழந்தை ஏசு சொரூபத்தை குடிலில் வைத்தார். உதவி பங்குத் தந்தை ஜியோ பிரான்சிஸ் சேவியர் உடனிருந்தார்.
நெல்லித்தோப்பு, புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில், பங்குத் தந்தை தேவசகாயராஜ் தலைமையில், சிறப்பு திருப்பலி நடந்தது. வில்லியனுார், புனித லுார்து அன்னை ஆலயத்தில், பங்குத் தந்தை ஆல்பர்ட் தலைமையில் திருப்பலி நடந்தது.
துாய்மா வீதியில் உள்ள கப்ஸ் பேராலயத்தில், பாதர் ஜான் கென்னடி தலைமையில், சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஆட்டுப்பட்டி, புனித அந்தோனியர் ஆலயத்தில், பாதர் பாஸ்கல்ராஜ் தலைமையில் திருப்பலி நடந்தது.
ரெட்டியார்பாளையம் புனித ஆந்த்ரேயா ஆலயம், அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், தட்டாஞ்சாவடி பாத்திமா தேவாலயம் உள்ளிட்ட புதுச்சேரியில் உள்ள அனைத்து தேவாலயங்களில், நேற்று நள்ளிரவு சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை நடந்தது. நிகழ்ச்சியில், ஏராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர்.