/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆல்பா பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
/
ஆல்பா பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
ADDED : டிச 25, 2025 05:41 AM

புதுச்சேரி: ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் தின விழா பள்ளி வளாகத்தில் கொண்டாடப்ப்டடது.
புதுச்சேரி உருளையன்பேட்டை ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, மழலையர் வகுப்பைச் சார்ந்த சிறுவர், சிறுமியருக்கான கலைநிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.
கிறிஸ்துமஸ் தாத்தாவாக வேடம் அணிந்து மாணவர் ஒருவர் மழலையர்களுக்கு பரிசுகளை அவர்களுக்குள் பரிமாறிக் கொடுத்து மகிழ்ந்தார். அப்பரிசு பொருட்களை பெற்ற மழலையர் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.
பல்வேறு வேடங்கள் அணிந்த மழலையர்களுக்கு ஆல்பா கல்வி நிறுவனங்களின் இயக்குனர் தனதியாகு பரிசுகள், இனிப்புகள் வழங்கி ஊக்கப்படுத்தினார். விழாவிற்கு பெற்றோர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

