/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சி.ஐ.டி.யூ., கண்டன ஆர்ப்பாட்டம்
/
சி.ஐ.டி.யூ., கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 16, 2024 04:20 AM

புதுச்சேரி : புதுச்சேரி சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை கட்டட நலவாரிய அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தலைவர் கலியன் தலைமை தாங்கினார். பொருளாளர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் பிரபுராஜ், துணைத் தலைவர்கள் தினேஷ்குமார், கொளஞ்சியப்பன் ஆகியோர் கோரிக்கைள் குறித்து பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், புதுச்சேரி கட்டட தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை கால உதவி தொகையாக ரூ. 5,000 வழங்கிட வேண்டும். நலவாரியத்தில் புதிய உறுப்பினராக விண்ணப்பித்த தொழிலாளர்களை அலைக்கழிக்காமல் விரைந்து ஆய்வு செய்து, உறுப்பினர்களாக பதிவு செய்ய வேண்டும். கட்டட தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களை நியமித்து, நலவாரிய கூட்டத்தை உடனடியாக கூட்டவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.