/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போக்குவரத்து துறையை கண்டித்து சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்
/
போக்குவரத்து துறையை கண்டித்து சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து துறையை கண்டித்து சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து துறையை கண்டித்து சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 16, 2025 05:43 AM

புதுச்சேரி: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து புதுச்சேரி பிரதேச தனியார் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சி.ஐ.டி.யு., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
போக்குவரத்து துறை எதிரே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொது செயலாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் அந்தோணி தாஸ் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு., மாநில செயலாளர் சீனிவாசன், கவுரவ தலைவர் ரவிச்சந்திரன், ஆட்டோ சங்க பொது செயலாளர் விஜயகுமார் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது, பைக் முதல் கனரக வாகனங்கள் வரை தகுதி சான்றிதழ் எடுப்பதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ட்ரக், கனரக வாகனங்களுக்கு 1,100 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 28,200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இலகுரக வாகனங்களுக்கு 700 ரூபாயாக இருந்த கட்டணம் 17,200 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வேன், பஸ், லாரி, போன்ற வாகனங்களுக்கு இருந்த 1,100 ரூபாய் கட்டணமும் 22,800 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை மத்திய மாநில அரசுகள் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், வாகனங்களின் தகுதி சான்றிதழ் கட்டண உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.
சாலை போக்குவரத்து சம்மேளன அகில இந்திய செயலாளர் சிவாஜி, மணிபாலன், சத்தியமூர்த்தி, மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

