/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழிலாளர்கள் பிரச்னைகளுக்கு அரசு தீர்வு காண வேண்டும்; சி.ஐ.டி.யூ., சவுந்தரராஜன் வலியுறுத்தல்

ADDED : அக் 05, 2024 04:37 AM

கடலுார், : தொழிலாளர்கள் பிரச்னைகளில், முதல்வரின் செயல்பாடு முன்னுக்கு பின் முரணாக உள்ளதாக சி.ஐ.டி.யூ., மாநில தலைவர் சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று கடலுாரில் நிருபர்களிடம் கூறியதாவது:
வெளிநாட்டு மூலதனத்தை தமிழகத்திற்கு கொண்டு வருவது சிறந்த முயற்சிதான். தொழிற்சாலைகள் வந்தால் மட்டும் போதாது. இருக்கின்ற தொழிற்சாலைகள் மூடப்படாமலும், தொழிலாளர்கள் வேலை இழக்காமல் இருக்க வேண்டும். வரலாற்றை, தமிழக முதல்வர் திரும்பி பார்க்க வேண்டும்.
தனியார் மொபைல் போன் நிறுவன தொழிலாளர்கள், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர்களின் கோரிக்கையான தொழிற்சங்கத்தை தொழிலாளர் துறை பதிவு செய்யவில்லை.
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதா மீது கவர்னர் முடிவு எடுக்காமல் கிடப்பில் வைத்துள்ளதை கண்டிக்கும் நீங்கள், தொழிற்சங்க பதிவு கோப்பில் கிடப்பில் வைத்திருப்பது தவறான அணுகுமுறையாகும். இதனை அரசு கைவிட வேண்டும்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 105 மாதங்களாக பஞ்சப்படி வழங்கவில்லை. நெய்வேலி என்.எல்.சி., ஊழியர்கள் 20 சதவீதம் போனஸ் கேட்டு போராடுகின்றனர். நிலம் வழங்கியவர்களுக்கு வேலை கொடுக்காமல் யார், யாருக்கோ கொடுத்துள்ளனர்.
தேர்தல் பிரசாரத்தில் தொழிலாளர் பிரச்னை தொடர்பாக முதல்வர் கூறியதற்கு நேர் எதிராக தற்போதைய செயல்பாடு உள்ளது. தொழிலாளர்கள் பிரச்னைகளை அரசு தீர்த்து வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.