/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பழைய துறைமுக வளாகத்தில் நகர பொழுதுபோக்கு மையம்
/
பழைய துறைமுக வளாகத்தில் நகர பொழுதுபோக்கு மையம்
ADDED : பிப் 22, 2024 06:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பழைய துறைமுக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள, நகர பொழுதுபோக்கு மையம் இன்று திறந்து வைக்கப்படுகிறது.
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், பழைய துறைமுக வளாகத்தில், ரூ.5.8 கோடி செலவில் 'நகர பொழுதுபோக்கு மையம்' கட்டப்பட்டுள்ளது. இங்கு, 3,400 பேர் அமரக்கூடிய பிரமாண்ட அரங்கம் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டுள்ளது.
பொழுதுபோக்கு மையத்தை முதல்வர் ரங்கசாமி இன்று மதியம் திறந்து வைக்கிறார். இதை முன்னிட்டு, பொழுது போக்கு மையத்தை பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். செயற்பொறியாளர் வளவன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.