/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொங்கல் பண்டிகைக்கு மண் பானைகள் 'தயார்'
/
பொங்கல் பண்டிகைக்கு மண் பானைகள் 'தயார்'
ADDED : ஜன 13, 2026 06:52 AM

புதுச்சேரி: பொங்கல் பண்டிகையொட்டி, மண் பானைகளை உற்பத்தி செய்து, வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்ய தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தமிழர்கள் வெகு விமர்சியாக பொங்கல் பண்டிகையை, வரும் 15ம் தேதி கொண்டாட இருக்கின்றனர்.
அதையொட்டி, வில்லி யனுார் அடுத்த பள்ளித்தென்னல் பகுதியில், மண் பானைகள் செய்யும் தொழிலில், தொழிலாளர்கள் மும்புறமாக ஈடுபட்டு வருகின்றனர்.
உற்பத்தி செய்து, மண் பானைகளை, வெளியூர்களுக்கு அனுப்ப தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மண் பானை தொழிலில் ஈடுபட்டு வரும், அய்யப்பன் என்பவர் கூறுகையில், இந்த பகுதியில், ஓரு காலத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பானை செய்யும் தொழில் ஈடுபட்டனர். ஆனால், தற்போது 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மட்டுமே இத்தொழிலை செய்து வருகின்றனர்.
பொங்கல் பண்டிகைக்காக தினமும், 30 முதல் 40 பானை வரை குடும்பத்தினர் உதவியுடன் மண் பானைகளை கடந்த 30 ஆண்டுகளாக செய்து வருகிறேன். ஒரு கிலோ பொங்கல் வைக்கும் பானை 200க்கு விற்பனை செய்து வருகிறோம்.
உற்பத்தி செய்யப்பட்ட பானைகளை, புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனைக்கு அனுப்ப தயார் நிலையில் உள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு பின்னர், கல்யாண நிகழ்ச்சியில் வைக்கும் பானை, கோவில் கும்பாபிேஷகம் மற்றும் திருவிழா, வீட்டு கிரகபிரவேஷம் உள்ளிட்ட பல்வேறு சடங்குகளுக்கான பானைகளை செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.

