தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நளன் குளத்தில் துாய்மை பணி

 நளன் குளத்தில் துாய்மை பணி

 நளன் குளத்தில் துாய்மை பணி


ADDED : பிப் 18, 2026 04:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2026 04:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்கால்: திருநள்ளாரில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு நளன் குளத்தை துாய்மை செய்யும் பணியில் கோவில் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

சனி பகவான் கோவிலை சுற்றி சரஸ்வதி தீர்த்தம், கோவில் நுழைவு வாயில் முன், பிரம்ம தீர்த்தங்கள் கோவில் நிர்வாகம் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு வரும் மார்ச்., 6ம் தேதி சனி பகவான் கும்பராசியில் இருந்து மீன ராசிக்கு காலை 8:24 மணிக்கு பிரவேசிக்கிறார். இதனால் கோவில் நிர்வாகம் பல்வேறு முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு முன், நளன் குளத்தில் நீராடி, அருகில் உள்ள விநாயகர் கோவிலில் தோங்காய் உடைந்து வழிப்பட்ட பின், தர்பாரண்யேஸ்வரர், முருகன், விநாயகர், அம்பாள் உள்ளிட்ட சுவாமிகளை வழிப்பட்டு, சனி பகவானை தரிசனம் செய்வது வழக்கம்.

இதனால் பக்தர்கள் நீராடும் நளன் குளத்தில் உள்ள நீரை மோட்டர் மூலம் அகற்றிவிட்டு குளத்தை துாய்மைப்படுத்தும் பணியில் கோவில் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us