ADDED : ஜூலை 20, 2026 03:41 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பேட்மிண்டன் வீராங் கனை சிந்துவிற்கு முதல் வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்து செய்தி:
ஜப்பான் ஓபன் 2026 பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், சிந்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இப்பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைத்த வீராங்கனை சிந்துவிற்கு வாழ்த்துகள்.
கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றின் மூலம் உலக அரங்கில் இந்தியாவின் புகழை மீண்டும் உயர்த்தியுள்ள சிந்துவின் சாதனை, இளம் வீரர்களுக்கு மிகப்பெரிய உத்வேகமாக அமையும்.
எதிர்காலத்திலும் இதுபோன்று வெற்றிகளை பெற்று, நாட்டிற்கு பெருமை பெற்று தர வாழ்த்துகள்.
