/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டி: மாணவிகளுக்கு முதல்வர் வாழ்த்து
/
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டி: மாணவிகளுக்கு முதல்வர் வாழ்த்து
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டி: மாணவிகளுக்கு முதல்வர் வாழ்த்து
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டி: மாணவிகளுக்கு முதல்வர் வாழ்த்து
ADDED : டிச 08, 2025 05:20 AM

புதுச்சேரி: ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத் தான் போட்டியில் இறுதி சுற்றுக்கு தேர்ச்சி பெற்ற மகளிர் பொறியியல் கல்லுாரி மாணவிகளை முதல்வர் ரங்கசாமி வாழ்த்தி, பயண செலவு வழங்கினார்.
மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு சார்பில், அகில இந்திய அளவில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டி நடந்தது.
இப்போட்டியில், 190 குழுக்கள் மத்திய சுற்றுலா அமைச்சகம் மூலம் கொடுக்கப்பட்ட உலக பிரச்னைகளுக்கு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தீர்வு காணும் திட்டத்தில் பங்கேற்றன.
இந்திய அளவில் 5 குழுக்கள் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டன. அதில், புதுச்சேரி மகளிர் பொறியியல் கல்லுாரி மாணவிகள் சமர்ப்பித்த திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேர்ச்சி பெற்ற புதுச்சேரி, மகளிர் பொறியியல் கல்லுாரி மாணவிகள் ஜெய்ப்பூர், மணிப்பால் பல்கலைக்கழகத்தில் இன்று (8ம் தேதி) முதல் 12ம் தேதி வரை நடக்கும் இறுதிப் போட்டிகளில் பங்கேற்க உள்ளது.
இதையொட்டி, ஜெய்ப்பூர் செல்லும் மாணவிகள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது மாணவிகளின் பயணத்திற்கான விமான டிக்கெட்களை வழங்கி, முதல்வர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
கல்லுாரி முதல்வர் தணிகாசலம், பேராசிரியர் நிர்மல்ராஜ் மற்றும் பெற்றோர்கள் உடன் இருந்தனர்.

