/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய தேக்வோண்டோ போட்டியில் வென்ற வீரர்களுக்கு முதல்வர் வாழ்த்து
/
தேசிய தேக்வோண்டோ போட்டியில் வென்ற வீரர்களுக்கு முதல்வர் வாழ்த்து
தேசிய தேக்வோண்டோ போட்டியில் வென்ற வீரர்களுக்கு முதல்வர் வாழ்த்து
தேசிய தேக்வோண்டோ போட்டியில் வென்ற வீரர்களுக்கு முதல்வர் வாழ்த்து
ADDED : டிச 26, 2024 05:52 AM

புதுச்சேரி: தேசிய அளவிலான தேக்வோண்டோ போட்டி யில் வெற்றி பெற்ற வீரர்கள், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மத்திய அரசு விளையாட்டு துறையின் அங்கீகாரம் பெற்ற தேக்வோண்டோ பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில், 38வது தேசிய சப் ஜூனியர் தேக்வோண்டோ குறுகி மற்றும் 13வது பூம்சே போட்டிகள் ஹரியானா மாநிலம், தவுதேவி லால் உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.
இப்போட்டியில் புதுச்சேரி தேக்வோண்டோ விளை யாட்டு சங்கம் சார்பில், தலைமை பயிற்சியாளர் டெக்னிக்கல் சேர்மன் பகவத்சிங் தலைமையில் பயிற்சியாளர் தக் ஷனப்பிரியா மற்றும் 15 வீரர், வீராங்கனை கள் கலந்து கொண்டனர்.
இதில், பூம்சே பிரிவில் துரோணா தேக்வோண்டோ அகாடமியின் விளையாட்டு வீரர்கள் வருண் பார்த்திபன், தீபக்குமார், சாம் பிரசாத் ஆகியோர் தலா ஒரு வெண்கலப் பதக்கம் வென்று புதுச்சேரிக்கு பெருமை சேர்ந்தனர்.
வெற்றி பெற்ற வீரர்கள், புதுச்சேரி தேக்வோண்டோ விளையாட்டு சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஸ்டாலின் தலைமையில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பொதுச் செயலாளர் மஞ்சுநாதன், பொருளாளர் அரவிந்த், அமைப்புச் செயலாளர் நந்தகுமார், சிலம்பரசன் மற்றும் பெற்றோர்கள் உடனிருந்தனர்.

