மங்கலம் தொகுதியில் புதிய மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி: முதல்வர் பூமி பூஜை செய்து துவக்கிவைப்பு
மங்கலம் தொகுதியில் புதிய மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி: முதல்வர் பூமி பூஜை செய்து துவக்கிவைப்பு
UPDATED : செப் 07, 2026 10:58 PM
ADDED : செப் 07, 2026 10:55 PM

வில்லியனுார்: மங்கலம் தொகுதி சங்கரன்பேட்டை மணகுப்பம் கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி அமைக்கும் பணியை முதல்வர் ரங்கசாமி பூமி பூஜை செய்து துவக்கிவைத்தார்.
புதுச்சேரி மாநிலம் கிராமப்புற மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பொதுப்பணித்துறையின் பொதுசுகாதார கோட்டம் மற்றும் கிராம குடிநீர் உட்கோட்டம் சார்பில் மங்கலம் தொகுதி சங்கரன்பேட்டை மணக்குப்பம் கிராமத்தில் ரூ.2:78 கோடியில் புதிய மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி, கீழ் நிலை தேக்கத்தொட்டி . நீர் உந்து மோட்டார், குடிநீர் வினியோக குழாய்கள் பதித்தல் உள்ளிட்ட பணிகள் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்று அடிக்கல் நாட்டினார். பின்னர் அப்பகுதியில் பூமி பூஜை செய்து பணியை துவக்கிவைத்தார்.
விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், எம்.எல்.ஏ.,க்கள் ரவிக்குமார் மற்றும் மோகன்தாஸ் , பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வீரசெல்வம், கண்காணிப்புப் பொறியாளர் சுந்தரமூர்த்தி, சுந்தரி, கிராம குடிநீர் திட்ட உதவிப் பொறியாளர் சிவானந்தம், பாஸ்கர், இளநிலைப் பொறியாளர், கார்த்திக், வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் பிரபாகர், முன்னாள் சேர்மன்கள் பாலமுருகன், ரேவதி பற்குணண், என்.ஆர்.காங்., பிரமுகர்கள் சரவணன், கண்ணபிரான் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
