இளைஞர் காங்., தேர்தல் அறிவிப்பு 11ம் தேதி வேட்பு மனு தாக்கல்
இளைஞர் காங்., தேர்தல் அறிவிப்பு 11ம் தேதி வேட்பு மனு தாக்கல்
ADDED : செப் 07, 2026 10:55 PM
: புதுச்சேரி: புதுச்சேரி இளைஞர் காங்., தேர்தலுக்காக வரும் 11ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது.
இது குறித்து இளைஞர் காங்., தேர்தல் நடத்தும் அதிகாரி முருகன் முனிரத்னம் கூறியதாவது;
புதுச்சேரியில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இளைஞர் காங்.,தேர்தல் நடத்தப்படும். அதன்படி இளைஞர் காங்., நிர்வாகிகள் பொறுப்பு நேற்றுடன் முடிவடைந்தது. அதையடுத்து, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
உறுப்பினர் சேர்க்கை நேற்று துவங்கியது. இந்த சேர்க்கையானது இணையவழி ஆப் மூலம் அரசியல் தலைவர்கள் நேரடியாக தேர்வாகவுள்ளனர். தலைவர்களை நியமிக்காமல் தேர்வு செய்யும் முறை இருக்கும்.
புதுச்சேரியில் இளைஞர் காங்., தலைமைக்கான தேர்தல் சட்டசபை தொகுதி, மாவட்டம் மற்றும் மாநிலம் என அனைத்து நிலைகளிலும் நடைபெறும். இதன் மூலம், யூனியன் பிரதேசம் முழுவதும் உள்ள ஒவ்வொரு பகுதியிலும், அடிமட்ட நிலை வரை இளைஞர் காங்., அமைப்பை வலுப்படுத்தப்படும்.
இந்த முறை ஒரு லட்சம் இளைஞர்கள் சேர்க்கை நடக்கும் என எதிர்பார்க்கிறோம். தேர்தலை நியாயமாக நடத்த தேர்தல் ஆணைய அமைப்பு உருவாக்கியுள்ளோம்.
தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 11 முதல் 18ம் தேதி வரை நடைபெறும்.
இது தொடர்பான தேதிகள் மற்றும் விவரங்கள் www.ycea.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
மாநிலத்தலைவர் வேட்பு மனுவுக்கு விண்ணப்பிப்போர் நேர்காணல் நடத்தி போட்டியிட அனுமதிக்கப்படுவார்கள். இந்த தேர்தல் பணிகள் நிறைவடைய மூன்று மாதங்களாகும் என அவர் தெரிவித்தார்.
