/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வர் சாதனை கையேடு முன்னாள் எம்.எல்.ஏ., வழங்கல்
/
முதல்வர் சாதனை கையேடு முன்னாள் எம்.எல்.ஏ., வழங்கல்
முதல்வர் சாதனை கையேடு முன்னாள் எம்.எல்.ஏ., வழங்கல்
முதல்வர் சாதனை கையேடு முன்னாள் எம்.எல்.ஏ., வழங்கல்
ADDED : நவ 21, 2025 05:59 AM

புதுச்சேரி: திருபுவனை தொகுதியில், முதல்வர் ரங்கசாமி செய்த சாதனைகள் குறித்த கையேடு வழங்கும் நிகழ்ச்சியை முன்னாள் எம்.எல்.ஏ., கோபிகா நேற்று தொடங்கி வைத்தார்.
திருபுவனை தொகுதி என்.ஆர்., காங்., சார்பில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, திருபுவனை தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு கிராமத்திற்கும் செய்த சாதனைகள் குறித்த கையேடு தயார் செய்து கிராமங்கள் தோறும் வீடு, வீடாக சென்று வழங்க உள்ளனர்.
அதன்படி, கையேடு வழங்கும் நிகழ்ச்சி, திருபுவனை பழண்டிமாரியம்மன் கோவில் அருகில் நேற்று தொடங்கியது.
முன்னாள் எம்.எல்.ஏ., கோபிகா பொதுமக்களுக்கு கையேடு வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, வீடு, வீடாக சென்று வழங்கினார்.
கையேட்டில் திருபு வனை தொகுதிட்பட்ட, திருபுவனை கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளில் முதல் வர் ரங்கசாமி மக்களுக்காக செய்த சாதனைகள் பட்டியலிடப்பட்டள்ளது.
அதில், முதியோர், விதவை, முதிர்கன்னி மற்றும் ஊனமுற்றோர் உதவித்தொகையை ஆயிரம் பயனாளிகளுக்கு உயர்த்தி வழங்கியது.
நிறைவடைந்த தார் சாலை பணிகள், நடந்து வரும் பணிகள், புதிதாக 25 மெகாவாட் மின்மாற்றி அமைத்தது உட்பட பல்வேறு பணிகள் பட்டியலிடப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் என்.ஆர்.காங்., தொகுதி தலைவர் ராஜா உட்பட பலர் உடனிருந்தனர்.

