/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுற்றுலாப் பயணிகளுடன் முதல்வர் கலந்துரையாடல்
/
சுற்றுலாப் பயணிகளுடன் முதல்வர் கலந்துரையாடல்
ADDED : டிச 26, 2024 05:41 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சுற்றுலா பயணிகளுடன் முதல்வர் ரங்கசாமி கலந்துரையாடினார்.
புதுச்சேரியில் பண்டிகை நாட்களில் பொதுமக்கள் பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு காரணிகளை முதல்வர் ரங்கசாமி ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, நகரின் பல்வேறு பகுதிகளுக்கு தனது காரில் பயணம் செய்தார்.
தொடர்ந்து, சுய்ப்ரேன் வீதியில் உள்ள ஒரு கடைக்கு சென்று காபி அருந்தினார். அப்போது அங்கு குவிந்திருந்த சுற்றுலா பயணிகள், முதல்வருக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் சிலர் அவருடன் 'செல்பி' எடுத்து கொண்டனர்.  இதையடுத்து போலீசாரிடம் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். சுற்றுலா பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும், அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது எனவும் போலீசாரிடம் அறிவுறுத்தினார்.

