பட்டாசு வெடித்ததில் தென்னை மரம் கார் தீப்பிடித்து சேதம்
பட்டாசு வெடித்ததில் தென்னை மரம் கார் தீப்பிடித்து சேதம்
UPDATED : நவ 10, 2026 10:32 AM
ADDED : நவ 10, 2026 10:29 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் தீபாவளி பட்டாசு வெடித்ததில் தென்னை மரம், கார் தீப்பிடித்து சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி கோரிமேடு தீயணைப்பு நிலைய எல்லைக்குட்பட்ட ரெட்டி யார்பாளையம் பகுதியில், தீபாவளியையொட்டி பட்டாசு வெடித்தபோது, அதிலிருந்து வெளியான தீப்பொறி தென்னை மரத்தின் மீது விழுந்தது. இதனால் மரம் தீப்பற்றி எரிந்தது.
இதையடுத்து, கோரிமேடு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இதேபோல், காமராஜர் நகர் பகுதியில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென பரவியதில் கார் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், திருபுவனை பகுதியில் பட்டாசு வெடித் ததில் ஏற்பட்ட பாதிப்பால், ஒரு வீட்டில் இருந்த மடிக்கணினி,டி.வி. மற்றும் பல்வேறு மின்சாதனப் பொருட்கள் சேதமடைந்தன. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந் தச்சம்பவங்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை .
இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
