தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மின்னல் தாக்கி தென்னை மரம் சேதம்

மின்னல் தாக்கி தென்னை மரம் சேதம்

மின்னல் தாக்கி தென்னை மரம் சேதம்


ADDED : ஜூன் 29, 2025 03:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2025 03:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர் : ஆதிங்கப்பட்டு கிராமத்தில் மின்னல் தாக்கியதில், தென்னை மரம் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

பாகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று மாலை 6:00 மணியளவில், சூறைகாற்று, இடி மின்னலுடன் லேசான மழை பெய்தது.

அப்போது, ஆதிங்கப்பட்டு சத்யா நகரை சேர்ந்த அய்யனார், 52, என்பவர் வீட்டில் இருந்த தென்னை மரம் மீது மின்னல் தாக்கி, தீப்பற்றி எரிந்தது.

மரத்தின் உச்சியில் இருந்த காய்ந்த ஓலைகள் எரிந்து தீப்பொறிகள் கீழே விழுந்தன. அக்கம் பக்கத்தில் வீடுகள், வைக்கோல் போர்கள் இருந்ததால், பொது மக்கள் பதட்டமடைந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த பாகூர் தீயணைப்பு நிலைய அதிகாரி கார்த்திகேயன் தலைமையில் ஏட்டு செல்வம் மற்றும் வீரர்கள் விரைந்து சென்று, தீயை அணைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us