/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மத்திய அரசு திட்டத்தின் பெயரை கூறி பணம் வசூல்: பண்ருட்டி தம்பதி கைது
/
மத்திய அரசு திட்டத்தின் பெயரை கூறி பணம் வசூல்: பண்ருட்டி தம்பதி கைது
மத்திய அரசு திட்டத்தின் பெயரை கூறி பணம் வசூல்: பண்ருட்டி தம்பதி கைது
மத்திய அரசு திட்டத்தின் பெயரை கூறி பணம் வசூல்: பண்ருட்டி தம்பதி கைது
ADDED : ஜன 08, 2024 04:41 AM
பாகூர்: மத்திய அரசின் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் பெயரை கூறி, பொது மக்களிடம் பணம் வசூல் செய்த பண்ருட்டி பகுதியை சேர்ந்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி அடுத்த பாகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில், தனியார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த இருவர், வீடு வீடாக சென்று மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் கைத்தொழில் பயிற்சி அளிக்க உள்ளதாக கூறி உள்ளனர்.
அதற்காக, ஒரு விண்ணப்ப படிவத்தை கொடுத்து, பொதுமக்களின் பெயர், போட்டோ, ஆதார், வங்கி கணக்கு, வாக்காளர் அட்டை, கைரேகை உள்ளிட்ட விவரங்களை லேப்டாப்பில் பதிவு செய்துள்ளனர். மேலும், நபர் ஒருவருக்கு 250 ரூபாய் வீதம் வசூல் செய்துள்ளனர். இதில், சந்தேகம் அடைந்த சிலர் பாகூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு விரைந்து வந்த போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தினர். அவர்கள், கடலுார் மாவட்டம், பண்ருட்டி, திருவதிகையை சேர்ந்த முருகையன், 46; அவரது மனைவி மகேஸ்வரி, 38; என்பதும், இருவரும், பண்ருட்டியில் தொண்டு நிறுவனம் நடத்தி வருவதும், மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தில் தொழில் பயிற்சி இலவசமாக அளிக்கப்படும் நிலையில், அத்திட்டத்தின் பெயரை பயன்படுத்தி, பொது மக்களிடம் பணம் வசூல் செய்ததும் தெரியவந்தது.
இது குறித்து பாகூரை சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவர் அளித்த புகாரின் பேரில், மோசடி பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, முருகையன், மகேஸ்வரியை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 38 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.