ADDED : டிச 08, 2024 05:26 AM
புதுச்சேரி அரசு துறைகளில் இடமாற்றல், பதவி உயர்வுகள் எளிதில் கிடைப்பது கிடையாது. அமைச்சர் சிபாரிசு இருப்பவர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு, இடமாற்றல் கிடைத்து விடுகிறது. மற்ற ஊழியர்களுக்கு எளிதில் கிடைப்பது இல்லை என்னற்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒரு குறிப்பிட்ட கால கெடுவுக்கு பின்பு பதவி உயர்வு அளிக்கப்படும்.
இதற்கு சில மாதம் தாமதம் ஏற்பட்டாலும் கிடைத்து விடும். ஆனால் கடந்த சில மாதத்திற்கு முன்பு துறை ஒன்றில் சிலருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியாளர்களை கவுரவிக்கவும், சிறப்பு செய்யவும் வேண்டும் எனக் கூறி பதவி உயர்வு பெற்ற ஒவ்வொரு நபரிடம் இருந்து வசூல் வேட்டை நடந்தது.
அனைவரிடமும் வசூல் செய்த மொத்த பணத்தையும் ஒப்படைத்த பின்னரே, பதவி உயர்வுக்கான கோப்பு கையெழுத்தாகி உள்ளது.