ADDED : ஜன 02, 2024 05:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : உலக சமுதாய சேவா சங்கம் சார்பில், கூட்டு தியானம் நிகழ்ச்சி புதுச்சேரி வேதபுரம் அறிவு திருக்கோவிலில் நடந்தது.
துணை பேராசிரியர் உமா வரவேற்றார். வேதபுரம் அறிவு திருக்கோயில் செயலாளர் சேகர் (எ) லட்சுமணசாமி முன்னிலை வகித்தார். துணைத் தலைவி சுகந்தி, முன்னாள் அறங்காவலர் சுப்ரமணியன் தலைமையுரை ஆற்றினர். தலைவர் சவுந்தர்ராஜன், ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினர். கோவில் துணைத் தலைவர் கண்ணாயிரம், நிர்வாக திட்ட அலுவலர் விநாயகபாபு நோக்கவுரையாற்றினர். கூட்டு தியானத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
கார்த்திகேயன் நன்றி கூறினார்.

