ADDED : நவ 27, 2026 08:11 PM
புதுச்சேரி: ஆன்லைன் மூலம் சான்றிதழ்களை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது குறித்து கலெக்டர் குலோத்துங்கன் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார்.
வில்லியனூர் விவேகானந்தா அரசு மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் குலோத்துங்கள் இன்று (நவ.,27) ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பிளஸ் 2 பயிலும் மாணவர்களிடம் ஆன்லைன் மூலம் இருப்பிடம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த சான்றிதழ்களை எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து செய்முறை மற்றும் ஆவண பதிவிறக்கம் குறித்து கலெக்டர் விளக்கம் அளித்தார்.
கல்வியின் மேண்மை குறித்தும், மாணவர்கள் தாமாக முன் வந்து ஆன்லைன் மூலம் சான்றிதழ் பெறும் முறையை கற்றுக்கொள்ள வேண்டும் என பேசினார்.
சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்வது பற்றி சந்தேகம் இருப்பின் பள்ளி ஆசிரியர்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என, அறிவுரை வழங்கினார்.
நிகழ்ச்சியை தொடர்ந்து, வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையத்தை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பணியில் இருந்த மருத்துவர்களிடம் டெங்கு சம்பந்தமாக யாரேனும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்களா, மருந்து, மாத்திரைகள் இருப்பில் உள்ளதா என, கேட்டறிந்தார்.
