sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 03, 2026 ,பங்குனி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 சோதனை சாவடிகளில் கலெக்டர் ஆய்வு

/

 சோதனை சாவடிகளில் கலெக்டர் ஆய்வு

 சோதனை சாவடிகளில் கலெக்டர் ஆய்வு

 சோதனை சாவடிகளில் கலெக்டர் ஆய்வு


ADDED : மார் 31, 2026 10:59 PM

Google News

ADDED : மார் 31, 2026 10:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, மாநில எல்லைப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளை மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் ஆய்வு செய்தார்.

புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வரும் 9ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, தேர்தல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் நேற்று முன்தினம் இரவு மதகடிப்பட்டு மற்றும் திருக்கனுாரில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளை ஆய்வு செய்தார். அப்போது, அங்கு வைக்கப்பட்டுள்ள ஆவணங்களை பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து, அங்குள்ள சி.சி.டி.வி., கேமராக்கள் சரியாக உள்ளதா என, ஆய்வு செய்து, சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் வாகன சோதனையை தீவிரப்படுத்தி, பணம், பரிசுப் பொருட்கள், மதுபானம், பிற இலவச பொருட்கள் எடுத்துச் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்' என்றார்.

மேலும், வாகன சோதனைகளின் போது வீடியோ பதிவு செய்திட அறிவுறுத்தினார்.






      Dinamalar
      Follow us