/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு
ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு
ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு
ADDED : ஜன 10, 2025 05:48 AM

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு செய்து, நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், கலெக்டர் குலோத்துங்கன் நேற்று திடீரென ஆய்வு செய்தார். சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா என நோயாளி களிடம் விசாரித்தார்.
மருந்து வழங்கும் இடத்திற்கு சென்று, மருந்துகள் தட்டுபாடு இருக்கிறதா எனவும், மருந்து, மாத்திரைகளின் தரம் மற்றும் காலாவதி ஆகியுள்ளதா என சோதனை செய்தார்.
தொடர்ந்து, மருத்துவர்கள், ஊழியர்கள் நேரத்திற்கு வந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.
மருத்துவமனையை சுத்தமான முறையில் வைக்கவும், கர்ப்பிணி பெண்கள், காசநோயாளிகளுக்கு காலதாமதமின்றி சிகிச்சை அளிக்க வேண்டும் என, கலெக்டர் அறிவுறுத்தினார்.