தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் கலெக்டர் குலோத்துங்கன் ஆலோசனை

 ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் கலெக்டர் குலோத்துங்கன் ஆலோசனை

 ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் கலெக்டர் குலோத்துங்கன் ஆலோசனை


ADDED : ஜூலை 03, 2026 03:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2026 03:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் நடைபெற உள்ள ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் தொடர்பான, முதற்கட்ட ஆயத்த பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் நடந்தது.

புதுச்சேரியில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை, இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம், உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இது தொடர்பான, முதற்கட்ட ஆயத்த பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் நேற்று நடந்தது.

மூத்த ராணுவ அதிகாரி கலோனல் வாசிம் அகம்மது, புதுச்சேரி போலீஸ் சீனியர் எஸ்.பிக்கள்., கலைவாணன், நித்யா ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட நிர்வாகம், பேரிடர் மேலாண்மைத் துறை, போலீஸ், பொதுப்பணி, உள்ளாட்சி, சுகாதாரம், தீயணைப்பு துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கலெக்டர் குலோத்துங்கன் புதுச்சேரி மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரம் பேர் வீதம் தேர்வில் கலந்து கொள்ள வருவார்கள். அவர்களுக்கான பாதுகாப்பு, வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதிகள், இரவு நேரங்களில் அண்டை மாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு வசதியாக பஸ் நிலையத்திலிருந்து விளையாட்டு அரங்கத்திற்கு இலவச பஸ் வசதி, போன்றவற்றை ஏற்படுத்தி தருவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

தேர்வில் கலந்து கொள்ள வருபவர்கள் கட்டணம் செலுத்தி உணவருந்தும் வசதி, 24 மணி நேரமும் சுத்தமான குடிநீர், மொபைல் டாய்லெட் வசதி, பான்லே மூலம் உள் விளையாட்டு அரங்கில் கட்டணம் செலுத்தி மோர் உள்ளிட்ட குளிர் பானங்கள் வழங்கும் வசதி, 24 மணி நேரமும் அனைத்து வசதிகளை கொண்ட இரண்டு ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், வரும் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என, அனைத்து துறை அதிகாரிகளுக்கும் கலெக்டர் குலோத்துங்கன் ஆணை பிறப்பித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us